ஆசிரியர்: ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ்
1/
தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டும், ஒலிகளை அல்ல. ஆனால் பிறப்பிடத்தில் உருவாகவல்ல எல்லா ஒலிகளையும் எழுத்துக்கள் உள்ளடக்குகின்றன. இந்தக் கோட்பாட்டை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்க. [அறிக்கை], [இலக்கணம்], [பாவனை உதாரணம்], [மற்றைய மொழிகள் ஒலிக்கு எழுத்துத் தருகின்றன].
2/
தமிழின் அன்றாட பாவனையில் காணப்படும் ஒலியங்களைக் குறியிட்டுக் காட்டவும், "புறொநஉன்சிஏசிஒன்" குரலொலி அகராதி வெளியிடவும் ஏற்ற குரலொலி அடையாளம் காட்டும் (டைஆகிறிற்றிக்ஸ்) உருவாக்கவும் அதனைத் தகுதரம் செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்க. (உயிர், மெய், ஆய்தம்: உதாரணம்: அ̂, க̥, ஃ̡, ஃ̃). [குரலொலி குறிதம், {டை ஆகிறிற்றிக்ச்̖}], [அறிக்கை], [இலக்கணம்], [பாவனை உதாரணம்],
3/
தமிழ் எழுத்துக்கள் பிறப்பிடத்தைக் குறிப்பதால், சிக்கலும் குதர்க்கமும் ஏற்படாதிருக்க, புதிய ஒலியம் குறிக்கும் எழுத்துக்கள் சேர்த்தல் கூடாது. ஒலிகாட்டும் அடையாளங்கள் மட்டுமே பாவித்தல் வேண்டும்.
4/
தமிழ்-கிரந்த எழுத்துக்கள் ஒலிகளைக் குறிப்பதாலும், தமிழ் எழுத்துக்கள் பிறப்பிடத்தைக் குறிப்பதாலும், தமிழில் பாவனையில் உள்ள ஒலியங்கள் மற்றைய மொழிகளைவிட அதிகமாக இருப்பதாலும், சிக்கல் தவிர்க்கக் குரல் அகராதியில் ஒலி காட்டும் தமிழ்க் குறியீடுகள் பாவித்தல் முதன்மை பெறவேண்டும். [ஒப்பீடு].
5/
குற்றியல் உகரம், குற்றியல் இகரம், மற்றைய குற்றியல் உயிரெழுத்துக்கள் என்பவற்றை அடையாளம் காண்பிக்க ஆய்வாளர்களுக்கென்ற அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள் உருவாக்கப்படவேண்டும். [குறியீடுகள்], [அறிக்கை].
6/
ஆய்வாளர்களின் பாவனைக்காகவும், கணினியில் உள்ளகபாவனைமூலம் சொற்களை நிரல்படுத்தவும் (கொலேற்) புணரும் (பின்) அ (ə) எழுத்து வெளிப்படையாக உருவாக்கல் வேண்டும். [புணரும் "ə" குறியீடு], [அறிக்கை].
7/ எழுத்துப் பெயர்ப்பு (ற்றான்ச்̖ லிற்றெறேசிஒன்): பிறப்பிடத்தைக் குறிக்கும் தமிழ் எழுத்து, ஒலிகளைக் குறிக்கும் மற்றைய எழுத்துக்கள், வேறுவகையான கோட்ப்பாடுகள்கொண்ட எழுத்துக்கள் என்பன பற்றிய சிக்கல்களை ஆராய்ந்து அறிந்து திறமானதும் அதன்பின் இலகுவானதுமான "எழுத்துப் பெயர்ப்பு" முறைமையை அறிவித்தல் வேண்டும்.
8/
தமிழ் ஒருங்குறி (யுனிகோட்) இயற்கையாகவே (திட்டமிடாது) எழுத்துச் சீர்மையை செய்துவிட்டது என்பதை ஏற்று அதனை திட்டமிட்டு திறம்பட முன்னெடுக்கும் வண்ணம் செயற்படவேண்டும். [குறியீடுகள்], [அறிக்கை].
9/
எழுத்துச் சீர்மை
9.1/
முதலில் நீண்டகாலச் சீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்படல் வேண்டும் (திட்டம்/றோட்மாப்).
9.2/
பகுதி பகுதியான சீரமைப்பு நடவடிக்கை நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் அமைதல்வேண்டும்.
9.3/
3000ம் ஆண்டுகளுக்கு முன்பு, இலக்கணம் வகுத்த காலத்தில் எழுத்துக்கள் அமைந்த விதமும், அண்மைகாலச் சிக்கல் எழுத்துக்கள் அமையும் விதமும் ஒப்பீட்டுக்குட்படுத்தல் வேண்டும். [அறிக்கை]
9.4/
புணரும் (பின்) உயிர்கள் ஏழும் மெய் எழுத்தின் வலதுபுறமாக இடம்பெறவேண்டும். அதுவே தர்க்கம், அதுவே பழமை. [அறிக்கை], [மாதிரி]
9.5/
கொம்புகளின் குதர்க்கம் முதலில் அகற்றப்படல் வேண்டும். [அறிக்கை], [செவே].
9.6/
அடிப்படையான அிந்து உயிரெழுத்துக்களை மட்டும் உபயோகித்தல் தொடர்பாக ஆராய்தல்.
9.7/
உகர ஊகாரங்களை இலகுவாக்கல் வேண்டும். [அறிக்கை], [மாதிரி].
9.9/
புதிய எழுத்துக்கள் வலம்சுழிக் கோட்பாட்டை ஏற்கவேண்டும். [அறிக்கை]
9.9/
ஈர் உயிர் எழுத்துக்களும் நீட்டிய உயிரெழுத்துக்களும் அங்கீகரிக்கப்படல்வேண்டும். (அி, எீ, இு, ெி, ீீீ). இவை வலதுபுறமாக அமையும் புணரும் உயிர்வடிவங்களால் ஆதல் வேண்டும்.
9.10/
புள்ளிகொண்டு மெய்கள் நேரோடி (லினிஎ) இணைவதால், சிக்கல் கொண்ட "கொன்ஜங்க்ற்" என்ற கோட்பாடு தமிழுக்கு ஏற்றதல்ல என அறிவித்தல். [அறிக்கை]
9.11/
ஆய்தம் உயிரின் முன், உயிரின் பின், சொல்லின் முன், சொல்லின் பின் அமையலாம் என்பதை நிலைநாட்டல். [அறிக்கை]
9.12/
ஆய்தம் ஓர் மெருமாற்றும் (மொடூலேற்றிங்) தன்மை கொண்டது என்பதை ஆராய்தல்.
9.13/
ஆய்தம் நீட்டியும் எழுதவல்லது என்பதை நிலைநாட்டல். [அறிக்கை]
9.14/
ஆய்தத்தின் பலவகையான மெருகூட்டும் தன்மைகளில் ஒன்று (அஸ்பைறேசிஒன்) ககமெருகூட்டல் என்பதை ஆராய்தல். [அறிக்கை]
10/
ஒருங்குறியும் தமிழ் கணினியும்
10.1/
அடிப்படைக் கூறுகளான 30++ எழுத்துக்கள் மட்டும் கொண்ட ஒருங்குறித் தகுதரத்தை அங்கீகரித்தல். [அறிக்கை].
10.2/
இயற்கையானதும், தர்க்கமானதும், விஞ்ஞான இலக்கணத்தினதும் தெரிதலினால், ஒருங்குறியில் தமிழ் எழுத்துச் சீர்மை திட்டமிடாமலே நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளல். [அறிக்கை]
10.3/
தொலைநோக்குடன் ஒருங்குறியின் சீர்திருத்தப்பட்ட தன்மையை சீர்திருத்தத்தின் ஓர் ஆயுதமாக்கல். [அறிக்கை].
10.4/
ஒருங்குறியின் நேரோடி (லீனிஎ) தமிழ் எழுத்துக்களைத் தளவீழ் (வோல்பாக்) எழுத்துக்கள் என அறிவித்தல். [அறிக்கை], [படம்].
10.5/
ஈர்வழி-சிக்கல் (டபிள் என்கோடிங்) தகுதரத்தை அகற்றி நேரோடி முறையை மட்டும் அங்கீகரித்தல். [அறிக்கை], [படம்].
10.6/
49-பிற் சீர்மை மற்றும் அதிக-பிற் சீர்மை செய்தல். தமிழை, 16பிற் தளத்தில் மட்டும் இயங்க வழிசெய்தல். [அறிக்கை], [படம்].
10.7/
தமிழ் ஒருங்குறிக்குத் தொடாகோட்டு வட்டத்தின் (டொற்றெட் வட்டம்) தேவை இல்லை என்பதை அறிவித்தல்.
10.8/
தமிழ் கிரந்த எழுத்துக்களை, தமிழ் எழுத்துக்களின் முதன்மைத் தொடரிலிருந்து தமிழ் ஒருங்குறியின் இணைக்கப்பட்ட (எக்ஷ்ற்றென்சிஒன்) தொடருக்கு மாற்றுவது தொடர்பாக ஆராய்தல்.
--------