ஆசிரியர்: ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாச்̖
தமிழ்ப் பிராமிக்கு முந்தியகாலத்தில் தமிழ் எப்படி எழுதப்பட்டது? தமிழ்ப் பிராமிகாலத்தில் தமிழ் எப்படி எழுதப்பட்டது, தமிழ்ப் பிராமிகாலத்தின் பின் தமிழ் எப்படி எழுதப்பட்டது? இவைகளை உற்றுநோக்கும்போது, குறைந்தது பிராமிக்காலத்தில் இருந்த எழுத்துமுறை உன்னதமான தர்க்கம் கொண்டிருப்பதனையும் அதன் பின் அண்மைக் காலங்களில் அறியாமையுடன் செய்த மாற்றங்களாக இன்று எமது பாவனயில் இருக்கும் எழுத்துக்கள்தான் சீரழிவு செய்யப்பட்ட, குதர்க்கமான தமிழின் ஆதிப்பெருமையை புதைகுளிக்குள் தள்ளும் எழுத்துக்களாக இருக்கின்றன. இதைத்தான் தமிழ் எழுத்தை திரும்பவும் சீரமைக்கவேண்டிய இன்றய நிலைப்பாட்டின் காரணம்.
தமிழ் எழுத்துச்
சீர்மை ஆறு அடிப்படைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
1/ சீர்மையை ஆதரிப்போரும் சீர்மையை எதிர்ப்போரும் கலந்துரையாடவும் விவாதிக்கவும் ஏற்ற களம் அமைத்தல். [*]
2/ சீர்மையை ஆதரிப்போர், சரியாகவா அல்லது பிழையாகவா சீர்மையை முன்னெடுக்கின்றனர் என்பதைக் கலந்துரையாடவும் விவாதிக்கவும் ஏற்ற களம் அமைத்தல். [*]
3/ முழுமையான சீர்மையை திட்டமிடும் குழு அமைத்தல். [*]
4/ பகுதி பகுதியாக சீர்மைய நடைமுறைப்படுத்தும் குழு அமைத்தல். [*]
5/ சீர்மைக்குள் அடங்காத, ஆனால் சீர்மையுடன் தொடர்பு என்ற தவறான கருத்துகளுக்குட்பட்ட தமிழின் முன்னெடுப்பை திட்டமிடல். [*]
உ+ம்: குரலொலியைக் குறிக்கும் குறியீடுகள் (டைஆக்றிற்றிக்ச்).
6/ மேற்தந்த ஐந்து முன்னெடுப்புக்களையும் ஒருங்கிணைக்கும் குழு அமைத்தல். [*]
சந்திக்கும்போது தாங்களும்
கொம்புகளின் குதர்கத்தில்
தடுமாறி தமிழில் தவறு
செய்வீர்கள் என்பதை
நிரூபித்தால் எழுத்துச்
சீர்மையை (திரும்பவும் சரியான எழுத்துக்களை பாவித்தல்) ஆதரிப்பீர்களா?
கொம்புகளின் குதர்கத்தால் எழுத வாசிக்க தெரிந்துகொண்டு பாடசாலையை விட்டோர் காலப்போக்கில் எழுத வாசிக்க தெரியோதாராய் மாறுவது உங்களின் மனதை உறுத்தவில்லையா?
|
கொம்புகளின் குதர்க்கமும் எழுத்துச் சீர்மையின் அவசியமும் Reinstating the combining e, ee, o, oo, au in Tamil |
|
|
புணரும் உகர ஊகார சீர்மை (ு, ூ) Rollingback the combining u, uu in Tamil |
|
|
ி ீ எழுத்து வடிவம் பற்றிய கருத்துகள் Rollingback the combining i, ii in Tamil |
|
|
Diphthongs and elongated vowels in Tamil |
|
தமிழ்
இணையப் பல்கலைக்கழகமும்
எழுத்துச் சீர்மையும்
மிகவும் தவறாக "எழுத்து என்பது ஒரு மொழியில் வழங்கும் ஒலியைக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட குறியீடு ஆகும்" என்று சொன்னாலும் எழுத்துச் சீர்மைபற்றி தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ன சொல்கின்றது என்பதை பார்க்க.
<பார்>
தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே, நேரடியாக ஒலிகளை அல்ல
[அவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ்]
த.இ.ப சொல்கின்றது, "எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குமுன் உலகில் எத்தனை வகையான எழுத்துமுறைகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். உலகில் இரண்டு வகையான எழுத்துமுறைகள் உள்ளன. அவை வருமாறு:
1. ஓவிய எழுத்துமுறை
2. ஒலிசார் எழுத்து முறை"
மேபடி த.இ.ப வின் கருத்து மிகவும் தவறான கருத்து. தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டும்.
[அவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ்]
வீரமாமுனிவரும்
எழுத்துச் சீர்மையும்
உத்தமத்தில் ஓர்நாள்: எழுத்துச் சீர்மை (15)
புலவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்குப் பதில் - எழுத்துச் சீர்மை அவசியம்
=========================
|
நாக இளங்கோவன் அவர்களின் தவறான எதிர்வாதம்1, சீனத்துப் படஎழுத்து முறைகலை தமிழ் எழுத்து முரையுடன் ஒப்பிட்டு கருத்துக்கூற முயல்வது விதண்டாவாதம் எனலாம். ஆதித் தமிழ் எழுத்துக்களுக்கு இடைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சீரற்ற மாற்றங்களை திரும்பவும் சீர்செய்தல்தான் இன்றய சீர்திருத்தத்தின் நோக்கம் என்பதை தெரிந்தும் சொல்லாத காணொளிதான் இது. http://www.youtube.com/watch?v=N2h_GzDn6W8&feature=channel திரு நாக இளங்காவனின் மேற்படி காணொளி வெளியீட்டில் குறைபாடுகள். |
|
| தினமலர் - நாக கணேசன் | |